இரண்டு லாரிகள் மோதி பயங்கர விபத்து டிரைவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்

கும்மிடிப்பூண்டி அடுத்த பஞ்செட்டி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு லாரிகள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது லாரியை ஓட்டி வந்த டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்;

Update: 2025-06-04 07:10 GMT
கும்மிடிப்பூண்டி அடுத்த பஞ்செட்டி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு லாரிகள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது லாரியை ஓட்டி வந்த டிரைவர் சம்பவ இடத்திலேயே பலி கும்மிடிப்பூண்டி அடுத்த பஞ்செட்டி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு மேம்பாலத்தின் மீது மெதுவாக சென்ற லாரியின் மீது தூத்துக்குடியில் இருந்து ஐஸ் கட்டிகளுடன் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதிக்கு மீன் ஏற்றுக்கொண்டு சென்ற லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் நிலக்கரி லாரியின் பின்புறம் லேசான சேதமடைந்த நிலையில் மீன் ஏற்றி வரச் சென்ற லாரியில் இருந்த தூத்துக்குடி, உடன்குடியைச் சேர்ந்த 50 வயதுடைய சுடலை என்பவர் இரண்டு லாரிகளுக்கு இடையே சிக்கி உடல் நசுக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் லாரியை ஒட்டி வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த சேர்ந்த நல்லதம்பி என்பவர் முகத்தில் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். லாரிகளுக்கு இடையே சிக்கி உடல் நசங்கி உயிரிழந்த சுடலையின் உடல் ராட்சத கிரேன் மூலம் மீட்கப்பட்ட நிலையில் அவரது உடல் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News