திருநெல்வேலி மாவட்டம் களக்காடு நகராட்சி ஆணையாளரிடம் இன்று (ஜூன் 4) நெல்லை மேற்கு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மனு அளித்தனர். அதில் களக்காடு நகராட்சிக்குட்பட்ட கடைகளை மீண்டும் பழைய குத்தகைக்காரர்களுக்கு ஒப்படைக்கவும், களக்காடு புதிய பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயர் வைக்கவும் கூறியிருந்தனர்.