இச்சிபுத்தூர்: சாலையில் உள்ள பலத்தை சரி செய்ய கோரிக்கை

சாலையில் உள்ள பலத்தை சரி செய்ய கோரிக்கை;

Update: 2025-06-05 04:12 GMT
அரக்கோணம் அடுத்த இச்சிபுத்தூர் கிராமத்தில் உள்ள தெருக்களில் மின் விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து உள்ளது. மேலும், பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள சிமெண்டு சாலையில் ஆழமான பள்ளம் ஏற்பட்டு பல மாதங்களாகியும் சரி செய்யப்படாமலேயே உள்ளது. இதனால் அந்த தெருவில் நடந்து செல்லும் குழந்தைகள், முதியவர்கள் தவறி பள்ளத்தில் விழுந்தால் அசம்பாவிதங்கள் ஏற்படும் நிலை உள்ளது. இதே போன்று குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் ஊராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளுக்கு பல மாதங்களாக முறையாக குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். எனவே இதன் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News