வெள்ளியணை - ரயில்வே ஸ்பீட் பிரேக்கில் வேகமாக சென்ற டூவீலர் கீழே விழுந்து விபத்து.
வெள்ளியணை - ரயில்வே ஸ்பீட் பிரேக்கில் வேகமாக சென்ற டூவீலர் கீழே விழுந்து விபத்து.;
வெள்ளியணை - ரயில்வே ஸ்பீட் பிரேக்கில் வேகமாக சென்ற டூவீலர் கீழே விழுந்து விபத்து. கரூர் மாவட்டம், வெள்ளியணை , மேற்கு மேடு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மனைவி காளியம்மாள் வயது 73. இவரது மருமகள் வனிதா வயது 40. இவர்கள் இருவரும் ஜூன் 3- தேதி மதியம் 3- மணியளவில் , விஜயபுரத்திலிருந்து வெள்ளியனை செல்லும் சாலையில் டூவீலரில் சென்றனர். டூவீலரை வனிதா ஒட்டி சென்றார். இவர்களது வாகனம் அப்பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகே உள்ள ஸ்பீடு பிரேக்கில் செல்லும்போது , டூவீலரை வேகமாக இயக்கியதால் நிலை தடுமாறி பின்னால் அமர்ந்து வந்த அவரது மாமியார் காளியம்மாள் கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் , அவரை கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சம்பவம் தொடர்பாக காளியம்மாள் அளித்த புகாரின் பேரில் , மருமகள் வனிதா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.