சொகுசு கார் விபத்து

காவல்துறையினர் விசாரணை;

Update: 2025-06-05 14:01 GMT
ஊட்டி எல்லநள்ளி பகுதியில் நாயை கொஞ்சுவதில் ஈடுபட்ட பெண்மணி கவனம்சிதறியதால் காவலர் அறை மீது மோதி விபத்து பொதுமக்கள் அதிர்ச்சி! நீலகிரி மாவட்டம் ஊட்டி எல்லநள்ளி பேருந்நு நிலைய பகுதியில் இன்று மாலை நிகழ்ந்த விபத்து அனைவரையும் அதிரவைத்தது விபத்தின் பின்னணி: ஒரு பெண்மணி தன்னுடைய வாகனத்தில் நாயுடன் பயணம் செய்துள்ளார். வழியில் செல்லும் போது, அந்த நாய் சிறிய குஞ்சு போல செயல்பட்டதையடுத்து, அவனை “கொஞ்சி கொண்டே ஓட்டும் போது ஒரு கை விலகிய நிலையில், வாகனத்தை சரியாக கட்டுப்படுத்த முடியாமல் போனது. நாயைகொஞ்சும் செயலில் கவனம் சிதறிய பெண்மணி பேருந்துக்காக பலர் நின்று இருப்பை பார்த்து வாகனத்தை திருப்பியதில் அங்கிருந்த தடுப்பில் மோதி எதிரே இருந்த காவல்துறை அறை மீது நேரில் மோதினார் இந்த விபத்தில் வாகனம் முன்புறம் நசுங்கியது காவலர் அறை முழுவதிலும் சேதமடைந்தது காவலர் அறையில் இருந்த காவலர் குதித்து ஓடியதால் உயிர் தப்பினார் வாகனம் நேராக மோதி இருந்தால் பலருக்கு காயம் ஏற்பட்டு இருக்கும் இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த பொதுமக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்து நடந்தவுடன் மக்கள் விரைந்து சென்று உதவி செய்தனர். காவல்துறையினரும் விரைந்து வந்து, மேல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பொதுமக்கள், வாகன ஓட்டும்போது எந்தவிதமான தனிப்பட்ட செயல்களும் செய்யக்கூடாது என, போலீசார் வலியுறுத்தினர். பாசம் நல்லது என்றாலும், அது வாகனம் ஓட்டும் நேரத்தில் அபாயகரமாக மாறக்கூடும் என்பது இந்த நிகழ்வு மூலம் நிரூபிக்கப்படுகிறது.

Similar News