நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கண்ணேரிமூக்கு பகுதியில் இரவு நேரத்தில் சாலையில் உலா வந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சம்....
கவனமுடன் பயணிக்க கோரிக்கை;
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கண்ணேரிமூக்கு பகுதியில் இரவு நேரத்தில் சாலையில் உலா வந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சம்... நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்று வட்டாரப்பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகளின் என்னிக்கை அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர தேடி குடியிருப்பு பகுதியில் உலா வருவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் கோத்தகிரி அருகே கண்ணேரி மூக்கு சாலையில் சர்வ சாதாரணமாக சிறுத்தை ஒன்று நடந்து சென்றது. இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்துள்ளனர். சற்று நேரம் சாலையில் உலாவிய சிறுத்தை தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். வனத்துறையினர் சிறுத்தையை கண்கானிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.