ஆண்டிப்பட்டி கோட்டையில் மணமக்களை வாழ்த்த வந்த விஜய பிரபாகரனுக்கு உற்சாக வரவேற்பு.

ஆண்டிப்பட்டி கோட்டையில் மணமக்களை வாழ்த்த வந்த விஜய பிரபாகரனுக்கு உற்சாக வரவேற்பு.;

Update: 2025-06-06 09:13 GMT
ஆண்டிப்பட்டி கோட்டையில் மணமக்களை வாழ்த்த வந்த விஜய பிரபாகரனுக்கு உற்சாக வரவேற்பு. அரவக்குறிச்சி அடுத்த ஆண்டிப்பட்டி கோட்டை பகுதியில் தேமுதிக ஒன்றிய செயலாளர் சின்னசாமி இல்ல திருமண விழாவில் பங்கேற்க தேமுதிக இளைஞர் அணி செயலாளர் விஜய பிரபாகரன் ஆண்டிப்பட்டி கோட்டை பகுதிக்கு இன்று வந்தார். அவருக்கு திருமண வீட்டார் பூரண கும்பம் மரியாதை அளித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து இசைக்கலைஞர்கள்மேளதாளங்களுடன் தேவராட்டம் ஆடி உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கட்சி தொண்டர்கள் விஜய பிரபாகரனை மணமக்களை சந்திக்க அழைத்துச் சென்றனர். மணமக்களுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் விஜய பிரபாகரன். அப்போது,திருமண வீட்டில் பங்கேற்ற பெண்கள் ஆண்கள் சிறுவர்கள் விஜய பிரபாகரனுடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Similar News