ராயனூர் அருகே நீரிழிவு,அதிக ரத்த அழுத்தம் காரணமாக எலிவிசம் சாப்பிட்டு முதியவர் தற்கொலை.

ராயனூர் அருகே நீரிழிவு,அதிக ரத்த அழுத்தம் காரணமாக எலிவிசம் சாப்பிட்டு முதியவர் தற்கொலை.;

Update: 2025-06-06 14:24 GMT
ராயனூர் அருகே நீரிழிவு,அதிக ரத்த அழுத்தம் காரணமாக எலிவிசம் சாப்பிட்டு முதியவர் தற்கொலை. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணி வயது 70 இவருக்கு நீரிழிவு,அதிக ரத்த அழுத்தம் , வயிற்று வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்தது. இதற்காக அவர் சிகிச்சை பெற்றும் அவருக்கு குணமாகவில்லை. இதனால் விரத்தி மனப்பான்மையுடன் வாழ்ந்து வந்த மணி ஜூன் நான்காம் தேதி காலை 10 மணி அளவில் ராயனூர் பகுதியில் உள்ள ஒரு குளம் அருகே எலி விசம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் அறிந்த மணியின் மகன் ராம்குமார் வயது 36 என்பவர் தனது தந்தையை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த அவர்சிகிச்சை பலனின்றி ஜூன் 5-ம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ராம்குமார் அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் உயிரிழந்த மணியின் உடலை அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து,இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.

Similar News