ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு
ராணிப்பேட்டையில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுனர் மேளா!;
ராணிப்பேட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில், பல்வேறு தொழிற் பிரிவுகளை சேர்ந்த பயிற்சியாளர்களுக்கு பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுனர் மேளா மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புக்களை கொண்டு நாளை மறுநாள் 9-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்படுகிறது. தகுதியுடைய ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் தொழிற்பழகுனர் பயிற்சியில் சேர்ந்து மத்திய அரசின் சான்றிதழ் பெற்று பயன் பெறலாம். மேலும், இது தொடர்பான விவரங்களை மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனரை ranipetdsto@gmail.com F லிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.