சோளிங்கர் ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக பாலாலயம்!

ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக பாலாலயம்!;

Update: 2025-06-07 07:37 GMT
108 திவ்ய தேசங்களில் ஒன்றான ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக நரசிம்மர், யோக ஆஞ்சநேயர் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து பெரிய மலை யோக நரசிம்மர், அமிர்த வல்லி தாயார், சிறிய மலை ஆஞ்சநேயர் சுவாமியை தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் சிறியமலை ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் 56 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ளது. முதல் கட்டமாக கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வ தற்கான பாலாலயம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு மங் கள வாத்தியங்கள் முழங்க கலச பூஜை, யாக பூஜை செய்து பாலாலயம் நடைபெற்றது. உதவி ஆணையர் ராஜா மற்றும் கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Similar News