தென்காசியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை- போக்சோவில் ஆசாமி கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை- போக்சோவில் ஆசாமி கைது;

Update: 2025-06-07 13:37 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது நீலகண்டன் என்பவர் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இது குறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் பாத்திமா பர்வீன் விசாரணை மேற்கொண்டு சுரண்டை சிவகுருநாதபுரம் பெரியார் நகரைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகன் நீலகண்டன் (58) மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தார். மேலும் நேற்று நீலகண்டனை போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News