தென்காசி அருகே விளையாட்டு அரங்கம் பணிகள் ஆய்வு

விளையாட்டு அரங்கம் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு;

Update: 2025-06-07 13:38 GMT
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள பாட்டாகுறிச்சி ஊராட்சி பகுதியில் ரூ. 15 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. விளையாட்டு அரங்கத்தின் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / இயக்குநர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விச் சேவைகள் கழகம் பொ. சங்கர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல்கிஷோர் ஆகியோர் இணைந்து நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது அரசுத்துறை அலுவலர்கள், மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Similar News