சிவியம் பாளையத்தில் டூவீலர்கள் மோதல். மூதாட்டி உயிரிழப்பு.

சிவியம் பாளையத்தில் டூவீலர்கள் மோதல். மூதாட்டி உயிரிழப்பு.;

Update: 2025-06-07 15:19 GMT
சிவியம் பாளையத்தில் டூவீலர்கள் மோதல். மூதாட்டி உயிரிழப்பு. கரூர் மாவட்டம் , மன்மங்கலம் தாலுக்கா , கடம்பன்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி வயது 61. அருகிலுள்ள சிவியம் பாளையத்தைச் சேர்ந்த காளியப்பன் மனைவி தங்கம்மாள் வயது 69. இவர்கள் இருவரும் ஜூன் 6-ம் தேதி மதியம் 3 மணி அளவில் , கடம்பன்குறிச்சியில் இருந்து மன்மங்கலம் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர். இவரது வாகனம் சிவியம்பாளையம் அருகே வந்தபோது , நாமக்கல் மாவட்டம், நைனாமலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் வயது 23 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர் , சுப்பிரமணிய ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது . இந்த விபத்தில் டூவீலர் உடன் இருவரும் கீழே விழுந்ததில் இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இருவரையும் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு தங்கம்மாளை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். சுப்பிரமணியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்ததங்கம்மாளின் மகன் பெரியசாமி வயது 44 என்பவர் அளித்த புகாரின் பேரில் , சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் டூவீலரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஒட்டி விபத்து ஏற்படுத்திய லோகேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வாங்கல் காவல்துறையினர்.

Similar News