சாம்பவா்வடகரையில் கிணற்றில் பெண் சடலம் மீட்பு
கிணற்றில் பெண் சடலம் மீட்பு;
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சாம்பவா்வடகரை செக்கடி கிணற்றுத் தெருவைச் சோ்ந்த முப்புடாதி( 55) என்பவா் கடந்த புதன்கிழமை இரவு காணாமல் போனாா். அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் சாம்பவா்வடகரை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இரட்டைகுளம் சாலையில் உள்ள செக்கடி கிணற்றில் அவரது சடலம் மிதந்தது தெரியவந்தது. இத்தகவலறிந்த போலீஸாா், சுரண்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் உதவியுடன் உடலை மீட்டு கூறாய்வுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் சாம்பவா்வடகரை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.