உள்துறை அமைச்சரே வரவேற்ற அதிமுக எம்எல்ஏக்கள்

மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சரை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர்;

Update: 2025-06-08 01:12 GMT
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானம் மூலம் நேற்று இரவு 10.30 மணியளவில் மதுரை வந்தடைந்தார். அவரை வரவேற்க விமான நிலையத்தில் 27 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மாநிலச் செயலாளர் சீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் எம்எல்ஏ பேராசிரியர் கதலி நரசிங்க பெருமாள், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் மற்றும் பாஜக மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்ட 27 பேர் உள்துறை அமைச்சரை வரவேற்றனர். பின்னர் கார் மூலம் சிந்தாமணி சுற்றுசாலையில் உள்ள தனியார் விடுதிக்கு புறப்பட்டார். இன்று (ஜூன்.8) காலை 11 மணியளவில் மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மனை தரிசிக்க வருகிறார். அதன்பின் ஒத்தக்கடையில் நடக்கும் பாஜகவினரின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு z+ பாதுகாப்பு உள்ளதால் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News