கிணற்றில் விழுந்த மகனை காப்பாற்ற சென்ற தந்தை உயிரிழந்தார்
திருவள்ளூர் அருகே அனுமதியின்றி வீட்டின் அருகே தோண்டிய கிணற்றில் தவறி விழுந்த மகனை காப்பாற்ற சென்ற தந்தை விஷவாயு தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது,;
திருவள்ளூர் - திருவள்ளூர் அருகே அனுமதியின்றி வீட்டின் அருகே தோண்டிய கிணற்றில் தவறி விழுந்த மகனை காப்பாற்ற சென்ற தந்தை விஷவாயு தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது, உயிருக்கு போராடிய அவருடைய மகனை பக்கத்து வீட்டு இளைஞன் கயிறு மூலமாக மீட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்துள்ள முதுகூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி, (61). இவருக்கு புவனேஷ்வரி என்ற மனைவியும் சிந்து என்ற மகள் சந்தோஷ் குமார் என்ற மகன் இருந்து வருகின்றனர் கிராமத்தில் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் ஜோதி தனது வீட்டின் பின்புறமாக அனுமதியின்றி 3 அடி அகலத்தில் சுமார் 30 அடி ஆழத்திற்கு 20 நாட்கள் மேலாக மகனும் தந்தையும் சேர்ந்து கிணறு தோண்டி உள்ளனர் அத்தகைய கிணற்றில் மின் மோட்டார் வைத்து நீர் உறிஞ்சி தொட்டியில் சேமித்து வைத்து வீட்டிற்கு பயன்படுத்தி வந்துள்ளனர், இந்நிலையில் இன்றைய தினம் தண்ணீர் வராததால் கிணறு பகுதிக்குச் சென்ற சந்தோஷ் குமார் கால் இடறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார், அதைக் கண்ட அவருடைய தந்தை ஜோதி மகனைக் காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்துள்ளார், அப்போது விஷவாயு தாக்கியதில் தந்தை ஜோதி பலியாகி உள்ளார், கிணற்றுக்குள் சந்தோஷ் குமார் சத்தம் கேட்டு அவருடைய தாய் புவனேஸ்வரி கூச்சலிடவே பக்கத்து வீட்டை சேர்ந்த இளைஞர் பாலாஜி என்பவர் கிணற்றுக்குள் கயிறு மூலமாக சந்தோஷை மீட்ட நிலையில் அவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர், சம்பவ இடத்திற்கு வந்த மப்பேடு போலீசார் பேரம்பாக்கம் தீயணைப்புத் துறையினரை வரவழைத்து கிணற்றுக்குள் மயங்கிய நிலையில் இருந்த ஜோதி சடலத்தை தீயணைப்பு துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், சம்பவ இடத்திற்கு திருவள்ளூர் வட்டாட்சியர் ரஜினிகாந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார், அக்கிராமத்தில் பல நாட்களாக குடிதண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் எந்தவித அனுமதியும் இன்றி பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட தெரியாமல் அவர்கள் கிணறு தோண்டி இருப்பது தெரியவந்துள்ளது, இச்சம்பவம் தொடர்பாக மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் திருவள்ளூர் அருகே அனுமதி இன்றி தோண்டிய கிணற்றில் தவறி விழுந்த மகனை காப்பாற்ற சென்ற தந்தை விஷவாயு தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது,