பட்டியல் இன மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
பட்டியல் இன மக்கள் 500க்கும் மேற்பட்டோர் வீட்டுமனை பட்டா வழங்க கோரி பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;
வடகரையில் பட்டியல் இன மக்கள் 500க்கும் மேற்பட்டோர் வீட்டுமனை பட்டா வழங்க கோரி பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் வடகரையில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் 500க்கும் மேற்பட்ட பட்டியல் இன குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி அப்பகுதி மக்கள் பகுஜன் சமாஜ் கட்சி விடுதலை சிறுத்தை கட்சி கம்யூனிஸ்ட் கட்சி உழைப்போர் உரிமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்று வரும் நிலையில் ஜமாபந்தி அலுவலர் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க உர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடவடிக்கை எடுக்காவிட்டால் கோட்டை நோக்கி பேரணியாக சென்று முதல்வரை சந்திப்போம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.