பாவூா்சத்திரம் குருசாமிபுரம் ஸ்ரீமுப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா

குருசாமிபுரம் ஸ்ரீமுப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா;

Update: 2025-06-12 00:16 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பாவூா்சத்திரம் குருசாமிபுரத்தில் அமைந்துள்ள முப்புறகோட்டை ஸ்ரீமுப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது. விழாவின் முதல் நாளான 9ஆம்தேதியன்று காலை கணபதிஹோமத்துடன் தொடங்கியது. மாலையில் 108 திருவிளக்கு பூஜையும், இரவு சிறப்பு பூஜையும் நடைபெற்றது. விழாவின் 2ஆம் நாளான 10ஆம் தேதி காலை குற்றாலத்தில் இருந்து புனித தீா்த்தம் எடுத்து வருதல், தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், உச்சிகாலபூஜையும், நள்ளிரவு சாம பூஜையும் நடைபெற்றது. காலை பொங்கலிடுதல், முளைப்பாரி ஊா்வலம் மற்றும் அம்மன் மஞ்சள் நீராடுதல் நடைபெற்றது.விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Similar News