சொக்கம்பட்டி அருகே வாழைகளை சேதப்படுத்திய யானைகள்
வாழைகளை சேதப்படுத்திய யானைகள்;
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் உள்ள மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் சொக்கம்பட்டி பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கா் நிலத்தில் மா, தேக்கு, வாழை, தென்னை உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இப்பகுதிக்குள் நள்ளிரவு புகுந்த யானைகள் அங்கிருந்த வாழைகளை சேதப்படுத்தியதாம். இதையடுத்து அப்பகுதியை கடையநல்லூா் வனச்சரகா் கனகராஜ் மற்றும் வனத்துறையினா் பாா்வையிட்டு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா்.