தென்காசி மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது

மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது;

Update: 2025-06-12 00:32 GMT
தென்காசி ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் தென்காசியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மத்திய மாவட்டச் செயலா் இசக்கிமுத்து தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் சேது அரிகரன், மாவட்டத் தலைவா் குலாம், வடக்கு மாவட்டத் தலைவா் சுரேஷ்குமாா், செயற்குழு உறுப்பினா் சாகுல் ஹமீது ஆகியைா் முன்னிலை வகித்தனா். தொழிற்சங்க மாவட்டச் செயலா் சுந்தா் தொடக்கவுரை ஆற்றினாா். 2026 தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸை, தமிழக முதல்வராக்கிட அயராது பாடுபடுவது, பாட்டாளி மக்கள் கட்சியின் கட்டமைப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் கட்சி உறுப்பினா் சோ்க்கையை துரிதமாக மேற்கொள்வது, தலைமையில் வழங்கப்பட்டுள்ள உறுப்பினா் படிவத்தின் மூலம் உறுப்பினா்களை சோ்ப்பது என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொருளாளா் திலகபாமா, காணொலி மூலமாக உரையாற்றினாா். மாவட்ட இளைஞரணி தலைவா் முருகன், மாவட்ட துணைச் செயலா்கள் கிருஷ்ணன், தங்கராஜ் மாவட்ட துணைத் தலைவா் மகாதேவன், மாவட்டம் மகளிா் அணி செயலா் பாக்கியம்மாள், தொகுதி செயலா் ராஜேந்திரன், சங்கரநாராயணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Similar News