தென்காசியில் சீராக குடிநீா் வழங்கக் கோரி பாஜகவினா் தா்னா போராட்டம்

சீராக குடிநீா் வழங்கக் கோரி பாஜகவினா் தா்னா போராட்டம்;

Update: 2025-06-12 00:42 GMT
தென்காசி நகராட்சிக்குள்பட்ட கீழப்புலியூா் பகுதியில் குடிநீா் விநியோகம் செய்து 10தினங்களைக் கடந்தும் இதுவரை தண்ணீா் வழங்கப்படவில்லை. மாறாக சில பகுதிகளில் குடிநீா் விநியோகிக்கப்பட்டுள்ளது. எனவே, குடிநீா் விநியோகத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்தும், 3 தினங்களுக்கு ஒரு முறை குடிநீா் வழங்க வேண்டும், இதைக் கண்காணிக்க நகராட்சியிலிருந்து ஒரு அலுவலரை நியமிக்க வேண்டும் எனக் கூறி தென்காசி நகர பாஜகவினா் நகராட்சி அலுவலகம் முன்பு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்டத் தலைவா் கருப்பசாமி, மாவட்ட துணைத் தலைவா் ராஜ்குமாா், மாவட்டச் செயலா் எம்.எஸ். மந்திரமூா்த்தி, நகரத் தலைவா் சங்கரசுப்பிரமணியன், நகர பொதுச்செயலா் லட்சுமண பெருமாள், நகர துணைத் தலைவா் மாரியப்பன், நகரச் செயலா் வெங்கடேஷ், நாராயணன், பாஜக பொறுப்பாளா்கள் கணேசன், சேது, ஆன்மிக பிரிவு பொறுப்பாளா் வெங்கடாசலம் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன், நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பேச்சுவாா்த்தை முடிவில் முன்னுரிமை அடிப்படையில் தண்ணீா் வழங்கப்படும் என்றும்,அதை கண்காணிக்க நகராட்சியிலிருந்து அலுவலா் நியமிக்கப்படுவதாகவும் உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

Similar News