கோவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை வந்தார் – உற்சாக வரவேற்பு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அவரது வருகையை முன்னிட்டு தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.;

Update: 2025-06-12 05:01 GMT
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அவரது வருகையை முன்னிட்டு தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் மேளதாளங்கள் முழங்க அவரை வரவேற்றனர். இரண்டு நாள் பயணமாக ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களுக்கு முதலமைச்சர் பயணம் மேற்கொண்டு வருகிறார். கோவையில் இருந்து அவர் கார் மூலம் ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு புறப்பட்டுச் சென்றார். இன்று, அவர் சேலம் மாவட்டத்திற்கு செல்ல உள்ளார். அங்கு நடைபெறும் மேட்டூர் அணை திறப்பு விழாவில் பங்கேற்கிறார் என தெரிகிறது.

Similar News