சங்கரன்கோவிலில் டிராக்டர் மோதியதில் ஒருவர் தலைநசுங்கி பரிதாபமாக பலி
டிராக்டர் மோதியதில் ஒருவர் தலைநசுங்கி பரிதாபமாக பலி;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கள்ளிகுளம் பகுதியைச் சேர்ந்த சுற்றுலா வேன் ஓட்டுநர் மகேந்திரன் இவர் அவரது ஊரிலிருந்து சங்கரன்கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும்போது பட்டத்தூர் கண்மாய் பகுதியில் இருந்து மணல் ஏற்றி வந்த டிராக்டர் சங்கரன்கோவில் சென்று கொண்டிருந்த நிலையில் முன்னே சென்ற டிராக்டர் வலதுபுறம் திடீரென திரும்பிய நிலையில் பின்னே இருசக்கர வாகனத்தில் வந்த மகேந்திரன் எதிர்பாராத விதமாக பின்பக்க சக்கரத்தில் சிக்கி விபத்துக்கு உள்ளானார். இந்த நிலையில் அவரது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை எடுத்து சம்பவ இடத்திற்கு வந்த இது குறித்து சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.