விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் செய்தி
விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் செய்தி;
அகமதாபாத் - லண்டன் ஏர் இந்தியா பயணிகள் விமானம் விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களுடைய குடும்பத்தார் அனைவருக்கும் ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த கோர விபத்து உலகில் வாழ்கின்ற அனைவரையும் உலுக்கியிருக்கிறது. எதிர்காலத்தில் எந்த நாட்டிலும் இதைப் போன்ற நிகழ்வுகள் நடைபெறக்கூடாது என்று இறைவனை பிரார்த்திக்கிறோம் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் அவர்கள் இரங்கல் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்