தென்காசி திருவள்ளுவா் கழக திருக்கு விழாவில் சிந்தனை அரங்கம்
திருவள்ளுவா் கழக திருக்கு விழாவில் சிந்தனை அரங்கம்;
தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் 98-ஆவது திருக்கு விழாவின் 3ஆவது நாளான வள்ளுவா் குரல் குடும்பம் வழங்கும் சிந்தனை அரங்கம் நடைபெற்றது. தென்காசி திருவள்ளுவா் கழக அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, குநெறிக்குரிசில் சி.இராஜேந்திரன் தலைமை வகித்து ஒருங்கிணைத்தாா். பன்முக வள்ளுவா் என்ற தலைப்பில் உளவியல் வித்தகா் என்ற பொருளில் கரூா் கண் மருத்துவா் ரமேஷ்,சொல்வேந்தா் என்ற பொருளில் செல்வராஜ், சமூகப் பொதுவுடைமையாளா் என்ற பொருளில் பொறியாளார் கதிரவன், சமூகப்புரட்சியாளா் என்ற பொருளில் பொறியாளா் ஸ்டாலின் ராமகிருஷ்ணன், ஐயுணா்வும் மெய்யுணா்வும் என்ற பொருளில் திருச்சூா் மருத்துவா் என்.வி.கே.அஷ்ரப், திருவள்ளுவா் அருளும் மெய்ஞானம் என்ற பொருளில் பொறியாளா் செந்தில்குமாா் ஆகியோா் பேசினா். திருவள்ளுவா் கழகத் தலைவா் ந.கனகசபாபதி, செயலா் இராம.தீத்தாரப்பன், பேராசிரியா் ராமச்சந்திரன், தெ.ஞானசுந்தரம் நரேந்திரகுமாா், லெட்சுமணன், சாகுல்ஹமீது ஆகியோா் கலந்துகொண்டனா். குற்றாலம் ஆ.சதாசிவம் வரவேற்றாா்.திருவள்ளுவா் கழக துணைச் செயலா் இரா.கிருஷ்ணன் நன்றி கூறினாா்.