ஓச்சேரியில் ‘உழவரைத் தேடி’ திட்ட சிறப்பு முகாம்
‘உழவரைத் தேடி’ திட்ட சிறப்பு முகாம்;
காவேரிப்பாக்கத்தை அடுத்த ஓச்சேரி ஊராட்சியில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம் தொடங்கி வைத்து திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்பு, தோட்டக்கலை, கூட்டுறவு, தமிழ்நாடு விதைச்சான்று, வேளாண்மை பொறியியல் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு, தங்கள் துறையில் உள்ள திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி பேசினர். பின்னர் விவசாயிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் தீபா கார்திகேயன், ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா ஜெயகாந்தன், ஆத்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் மொபேஷ்முருகன், உதவி வேளாண்மை அலுவலர் அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.