அறங்காவலர் குழு தலைவர் உறுப்பினர்கள் பதவி ஏற்பு

தர்மபுரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் உறுப்பினர் பதவி ஏற்பு;

Update: 2025-06-14 05:32 GMT
தர்மபுரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் புதியதாக நியமிக்கப்பட் டுள்ளனர். தலைவராக தர்மபுரி மே.அன்பழகன், உறுப்பினர்களாக அளே தர்மபுரி கிருஷ்ணமூர்த்தி, அரூர் ஓவியர் (எ) குப்பன், பாப்பாரப்பட்டி மாலா, மாட்லாம்பட்டியை சேர்ந்த துரை ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். நேற்று தர்மபுரி மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இவர்களுக்கான பதவியேற்பு விழா செங்குந்தர் மண்டபத்தில் நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை அறங்காவலர் குழு தலைவர் மே.அன்பழகன் தலைமை வகித்தார். விழாவில் தர்மபுரி மாவட்ட இந்து சமய அறநி லையத்துறை உதவி ஆணையர் மகாவிஷ்ணு தலைவர், உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத் தார். இந்நிகழ்ச்சியில், தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், ஆ.மணி. எம்பியுமான ஆ.மணி. மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ர மணி ஆகியோர் கலந்து கொண்டு தலைவர்,உறுப் பினர்களை வாழ்த்தினர் அவர்களும் இவர்களிடம் வாழ்த்து பெற்றனர். இந்தி கழ்ச்சியில், நகர செயலாளர் நாட்டான் மாது.துணைத்த லைவர் நித்யா அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் காவேரி, ஏஎஸ் சண்முகம். பெரியண்ணன், டாக்டர் பிரபு ராஜசேகர், நிர்வாகி கள் நடராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Similar News