கோவை: குட்டி யானை கோழிக்கமுத்தி முகாமிற்கு மாற்றம்
தாயை பிரிந்த குட்டி யானை, ஆனைமலை முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளது.;
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரக பகுதியில் தாயை பிரிந்த நிலையில் மீட்கப்பட்ட குட்டி யானையை, மீண்டும் தாயுடன் சேர்க்க கடந்த 18 நாட்களாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், மழையால் யானைக் கூட்டம் வனப்பகுதியில் காணப்படவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தும் தாயை அடையாளம் காண முடியாததால், குட்டி யானை சரிவிகிதமாக உணவு எடுத்துக்கொள்ள முடியாமல் மெலிந்து காணப்பட்டது. இதனை தொடர்ந்து, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் உத்தரவின் பேரில், சிறுமுகை வனச்சரகத்திலிருந்து குட்டி யானை நேற்று பாதுகாப்புடன் பொள்ளாச்சியில் உள்ள கோழிக்கமுத்தி யானைகள் பராமரிப்பு முகாமுக்கு மாற்றப்பட்டு, அங்கு மேலான பராமரிப்பிற்காக ஒப்படைக்கப்பட்டது.