குற்றால அருவியில் தடை நீக்கம் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
அருவியில் தடை நீக்கம் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்;
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் கன மழையின் காரணமாக பிரதான அருவியான குற்றால மெயின்,ஐந்தருவி பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் காற்றாற்று வெள்ளப்பெருக்கு வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அருவியில் குளிக்க இன்று மாலை வரை அருவியில் குளிக்க போலீசார் தடை விதித்தால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் அனைத்து அருவிகளிலும் தற்போது தடை நீக்கப்பட்டு தற்போது மீண்டும் அருவியில் குளிக்க தடை அனுமதி வழங்கப்பட்டது இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டி உள்ள நிலையில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது நாளை வார விடுமுறை என்பதால் மேலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க கூடும் என்பதால் போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இருப்பினும் இங்குள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் ஆனந்தமான் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்..