ஆலங்குளம் முத்தாரம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

முத்தாரம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்;

Update: 2025-06-15 00:06 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை (ஜூன் 16) நடைபெறுகிறது. இக்கோயிலில் அம்மனுக்கு புதிதாக சால கோபுரம் உள்ளிட்ட திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது. இதயைடுத்து திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, நேற்று காலை கணபதி ஹோமம், மாலையில் மூா்த்தி கலாகா்னம், இரவில் முதல்கால யாகசாலை பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இன்று 2 ஆம் யாகசாலை பூஜை, புஷ்பாபிஷேகம், 3 ஆம் யாகசாலை பூஜை, யந்திர ஸ்தாபனம், மூா்த்தி ஸ்தாபனம் ஆகியவை நடைபெறுகிறது. நாளை காலை 7 மணிக்கு 4 ஆம் கால யாகசாலை பூஜை, 8 மணிக்கு தீபாராதனை, 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மூலஸ்தான விமான கலசம், ஸ்ரீ மகா கணபதி, வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியா், ஸ்ரீ முத்தாராம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் தலைமை நிா்வாகி எஸ்.எஸ். ராமசுப்பு, அறக்கட்டளையாா், விழாக் குழுவினா் செய்துள்ளனா்.

Similar News