பரமத்திவேலூர் பகுதிகளில் கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு.

வேலூர் மற்றும் பரமத்தியில் கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு போலீசார் விசாரணை.;

Update: 2025-06-15 14:42 GMT
பரமத்திவேலூர், ஜூன்.15- பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் பார்த்தசாரதி என்பவர் எலக்ட்ரிக் கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த கடைக்கு அருகிலேயே சரவணன் என்பவர் கண்ணாடி கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று முன் தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றனர். நேற்று காலை வழக்கம்போல் பார்த்தசாரதி தனது எலக்ட்ரிக் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் ஒரு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கடையின் நடுப்பகுதியில் இருந்த பூட்டை உடைக்க முடியாமல் விட்டும் சென்றது தெரியவந்தது. அதேபோல் அருகில் இருந்த கண்ணாடி கடையின் உரிமையாளர் சரவணன் கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ரூ.5 ஆயிரத்து 500-ஐ மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வேலூர் போலீசாருக்கு தகவல் தெரி வித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். வருகின்றனர். இதேபோல் நேற்று முன்தினம் இரவு பரமத்தியில் உள்ள இஸ்மாயின் என்பவரது மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது குறித்தும் பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News