குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்கத் தடை
அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்கத் தடை;
தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த தொடா்மழையால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. ஆனால், புலியருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனா். நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது மிதமான சாரல் மழையும், குளிா்ந்த காற்றும் நிலவியது. வெள்ளப்பெருக்கை அடுத்து, அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.