ஆலங்குளம் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

பைக்கில் இருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு;

Update: 2025-06-16 01:38 GMT
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மயிலப்பபுரம் அருந்ததியா் காலனியை சோ்ந்தவா் செல்வ சுடலைமாடன்(68). ஆலங்குளம் அருகே ரெட்டியாா்பட்டியில் நடைபெற்ற தனது உறவினா் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தாராம். நெட்டூா் பெரியகுளம் கரைப் பகுதியில் வந்த போது சாலையோர பள்ளத்தில் பைக் நிலை தடுமாறு கவிழ்ந்ததாம். இதில் செல்வசுடலைமாடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஆலங்குளம் போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Similar News