ஆலங்குளத்தில் சிறுமியை திருமணம் செய்த இளைஞா் கைது
சிறுமியை திருமணம் செய்த இளைஞா் கைது;
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி அம்பேத்கா் நகரைச் சோ்ந்த வேல்முருகன் மகன் அம்பேத் அரசு(21). இவா், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை செய்தபோது அப்பகுதியில் உள்ள பேன்சி கடையில் வேலை செய்து வந்த 16 வயது சிறுமியும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனாாம். அதன் பின்னா் இருவரும் புதுப்பட்டியில் வசித்து வந்தனா். இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் 1098 க்கு வந்த புகாரை அடுத்து ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் அம்பேத் அரசு மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனா்.