திருவேங்கடத்தில் தியாகி விஸ்வநாததாஸ் பிறந்தநாள் விழா இன்று கொண்டாட்டம்
தியாகி விஸ்வநாததாஸ் பிறந்தநாள் விழா இன்று கொண்டாட்டம்;
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் காந்தி மண்டப முன்பு மருத்துவ சங்கம் சார்பாக தியாகி எஸ்,எஸ். விஸ்வநாத தாஸ் 136-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று காலையில் மருத்துவ சங்கம் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் தியாகி விஸ்வநாததாஸ் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்பு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைவர் மகேந்திரன், பொருளாளர் வேலுச்சாமி, தாலுகா தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.