குடிநீர்திட்ட குழாய் பதிக்கும் பணி துவக்கம்

கிள்ளியூர்;

Update: 2025-06-16 05:21 GMT
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மாநில நெடுஞ்சாலையான பரசேரி - திங்கள்நகர் - புதுக்கடை சாலையில் ஐரேனிபுரம் முதல் திக்கணங்கோடு வரை சாலையின் நடுவே பாதிக்கப்பட்டுள்ள சுனாமி கூட்டுக்குடிநீர் திட்ட ராட்சத சிமெண்ட் குழாய்கள் அடிக்கடி சேதம் ஏற்படுவது வழக்கம். எனவே சிமின்ட் ராட்சத குழாய்களை மாற்றி நவின முறையிலான டிஐ பைப்புகளை சாலையின் ஓரமாக பதிக்க வேண்டும் என கடந்த 2016 - ம் ஆண்டு முதல் ராஜேஷ்குமார் எம் எல் ஏ தொடர்ந்து பலமுறை சட்டமன்றத்தில் குரல் கொடுத்து வந்தார். இந்த நிலையில் புதுக்கடை பகுதியில் இருந்து திக்கணம்கோடு வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் டி ஐ குழாய்கள் பதிக்க உங்கள் தொகுதியில் முதலமைச்சர் 10 - கோரிக்கைகள் சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ. 26 .68 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து சுனாமி கூட்டுக்குடிநீர் திட்ட ராட்சத சிமெண்ட் குழாய்களை மாற்றி நவின முறையிலான டிஐ பைப்புகளை சாலையின் ஓரமாக பதிக்கும் பணி துவக்க நிகழ்ச்சி நேற்று புதுக்கடை அருகே சடையன்குழி பகுதியில் வைத்து நடைபெற்றது. அமைச்சர் மனோ தங்கராஜ், ராஜேஷ்குமார் எம் எல் ஏ , குமரி மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். மேலும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News