கன்னியாகுமரி மாவட்டதிராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் வைத்து மாவட்டத்தலைவர் மா.மு.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. திராவிடர்கழக மாவட்டச்செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தொடக்கவுரையாற்றினார். திராவிடர்கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் நோக்கவுரையாற்றினார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.செயக்குமார் சிறப்புரையாற்றினார். பெனடிக் ஆகியோர் மாநாடு சிறக்க நன்கொடை அறிவித்தார்கள். திராவிடர்கழக தோழர் க.யுவான்சுவின் தாயார் இ.இசபெல்லா, கடுக்கரை தோழர் ந.தமிழ் அரசனின் தந்தையார் நடராசன் ஆகியோருடைய மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பது, சூலை 11 இல் நாகர்கோவில் மாநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு, குடிஅரசு இதழ் நூற்றாண்டு திறந்த வெளி மாநாட்டினை எழுச்சிகரமாக நடத்துவது, அந்த மாநாட்டில் பங்கேற்க வரும் திராவிடர்கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு வழங்குவது, சென்னையில் நடைபெற்ற திராவிடர்கழக தலைமைச் செயற்குழு கூட்ட தீர்மானங்களை முழுமனதாக வரவேற்று குமரிமாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்துவது போன்ற தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன