நெல்லை மாநகர பேட்டை நரிக்குறவர் காலனியில் ஏராளமான நரிக்குறவர்கள் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இன்று (ஜூன் 17) புனித அந்தோனியார் பள்ளி சார்பில் தெரு தெருவாக சென்று ஆசிரியர் தங்கராஜ் தலைமையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதில் ஏராளமான நரிக்குறவர் குழந்தைகள் கல்வி பயில சேர்ந்து கொண்டனர்.