சேலம் திமுக பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம்

மேற்கு மாவட்ட செயலாளர் செல்வகணபதி அறிக்கை;

Update: 2025-06-17 08:47 GMT
சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.எம்.செல்வகணபதி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின் கீழ் "ஓரணியில் தமிழ்நாடு " என்ற தலைப்பில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி முகவர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நங்கவள்ளி, மேச்சேரி, எடப்பாடி ஒன்றியம், தாரமங்கலம் நகர மற்றும் ஒன்றிய பகுதி, இடங்கணசாலை, மகுடஞ்சாவடி ஒன்றிய பகுதி, மேட்டூர் நகரம் மற்றும் கொளத்தூர் ஒன்றிய பகுதிகளில் நடக்கிறது. நாளை (புதன்கிழமை) கொங்கணாபுரம் ஒன்றியம், எடப்பாடி நகரம், சங்ககிரி ஒன்றியம், நகரம் மற்றும் மேச்சேரி ஒன்றிய பகுதியில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் நடைபெற உள்ள கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் பாகநிலை முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், பூத் டிஜிட்டல் ஏஜெண்டுகள் மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

Similar News