ராணிப்பேட்டை சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலில் பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி ராமதாஸ் குடும்பத்துடன் சாமி தரிசனம்!!

ராணிப்பேட்டை சோளிங்கர் யோக நரசிம்மர் சாமி கோவிலில் பாட்டாளி மக்கள் கட்சி செயல் தலைவர் ஸ்ரீகாந்தி ராமதாஸ் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.;

Update: 2025-12-16 12:05 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக நரசிம்மர் சாமி கோவிலில் கார்த்திகை மாதத்தில் யோக நரசிம்மர் கண் திறந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். ஏராளமான பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி செயல் தலைவர் ஸ்ரீகாந்தி ராமதாஸ் குடும்பத்துடன் ரோப்காரில் சென்று யோகா நரசிம்மர், அமிர்தவல்லி தாயார் சாமி தரிசனம் செய்தார். திருக்கோவில் சார்பில் அவருக்கு பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து கோவில் பிரசாதம் வழங்கி மரியாதை செய்தனர். அப்போது பேசிய அவர் யோக நரசிம்மர் சக்தி வாய்ந்த கடவுள். நரசிம்மர் சாமியிடம் வைக்கும் வேண்டுதலை உடனடியாக நிறைவேறும் என்பது ஐதீகம். யோக நரசிம்மரை தரிசனம் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார். முன்னதாக தக்காகுளம் கரையில் அமைந்துள்ள 32 அடி உயரம் உள்ள யோக ஆஞ்சநேயரை தரிசனம் செய்து 500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். அன்னதானம் நிகழ்ச்சியை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அமைப்புச் செயலாளர் அ. ம.கிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார். மாவட்டச் செயலாளர் லோகநாதன், மாவட்ட அமைப்புச் செயலாளர் கார்த்திக் ராஜா, மாவட்ட துணைச் செயலாளர் வடிவேல் சோளிங்கர் நகராட்சி கவுன்சிலர் சாரதி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Similar News