01.01.26 ம்தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடையும் இளம் வாக்காளர்களுக்கு கல்லூரி வளாகத்திலேயே படிவம் எண் 6 வழங்கி பூர்த்தி செய்து திரும்பப் பெறும் பணி துவக்கம்

01.01.26 ம்தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடையும் இளம் வாக்காளர்களுக்கு கல்லூரி வளாகத்திலேயே படிவம் எண் 6 வழங்கி பூர்த்தி செய்து திரும்பப் பெற்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் துவக்கினார்;

Update: 2025-12-16 11:55 GMT
15.12.2025 முதல் வரும் ஜனவரி ஒன்றாம் தேதியில் 18 வயது பூர்த்தியடையும் இளம் வாக்காளர்களை புதிய வாக்காளர்களாகவாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகஇளம் வாக்காளர்களிடம் கல்லூரி வளாகங்களிலேயே படிவம் எண் 6 ஐ வழங்கிபூர்த்தி செய்து திரும்பப் பெரும் பணிநடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்லூரி வளாகத்தில் கே எஸ் ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோரிடம் புதிய வாக்காளர்களாக சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவம் 6ஐநாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் லெனின் திருச்செங்கோடு தாசில்தார் கிருஷ்ணவேணி ஆகியோர் வழங்கினர். 01.01.2026 அன்று 18 வயது பூர்த்தியாகும் மாணவ மாணவிகள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளும் வகையில் கல்லூரிகளுக்கே சென்று அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி படிவம் ஆறு விண்ணப்ப படிவங்களை கொடுத்து வாக்காளர் பட்டியலில் இணைத்துபடிவங்களை பெற்று வருகிறார்கள். அதன்படி இன்று கே எஸ் ஆர் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு உதவி ஆட்சியர் லெனின் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் திருச்செங்கோடு வட்டாட்சியர் கிருஷ்ணவேணி ஆகியோர் கலந்து கொண்டு விண்ணப்ப படிவங்களை வழங்கி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை திரும்ப பெற்றனர். திருச்செங்கோடு பகுதியில் உள்ள கல்லூரிகளில் இந்த முறை நடைமுறைப் படுத்தப்பட்டு விண்ணப்ப படிவங்கள் பெறப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் புதிதாக சேர விரும்புபவர்கள், விடுபட்டு போன வாக்காளர்கள் 18.01.2026 வரைநேரிலோ ஆன்லைன் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.வரும் 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது இந்த நிலையில் புதிதாக சேர்க்கப்பட்ட இளம் வாக்காளர்கள் விடுபட்டு போன வாக்காளர்கள், ஆகியோருடைய விண்ணப்பங்கள் 18.01.2026க்கு பிறகு 10.2.26 வரை பரிசீலனை செய்யப்பட்டு 13.02.26 இறுதி வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்பட்ட பிறகு 17.02. 2026 இல்இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News