இடையப்பட்டியில் பணம் வைத்து சூதாட்டம்

3 பேரை கைது செய்த பாலவிடுதி போலீசார்;

Update: 2025-12-16 11:13 GMT
கரூர் மாவட்டம் கடவூர் அருகே பாலவிடுதி காவல்சரகம் கடவூர் ஊராட்சி இடையபட்டியில் இருந்து பூஞ்சோலைபட்டி செல்லும் ஆற்றுவாரியில் பகுதியில் பணம் வைத்து சீட்டு ஆடுவதாக இப்பகுதியினர் பாலவிடுதி போலீசாருக்கு தகவல் அளித்து உள்ளனர். அதன் பேரில் அந்த பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்தவர்களான மருதமுத்து(51), ஆறுமுகம்(40), சந்திரசேகரன்(51) ஆகியோரை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் இவர்கள் 3 பேர் மீது வழக்கு பதிந்த போலீசார் அனைவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து சீட்டுக் கட்டுகள், ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல்செய்தனர்.

Similar News