சங்கரன்கோவிலில் ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது
ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கோட்டாட்சியர் கவிதா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா முன்னிலையில் நடைபெற்றது. இதில் திருவேங்கடம் வட்டம் பெருங்கோட்டூர், மேலஅழகுநாச்சியாபுரம் சுடுகாடு அமைக்க என்ற கோரிக்கை நடவடிக்கை எடுத்து கூடிய விரைவில் அமைத்து தரப்படும், ஆதிதிராவிடர் அதிகமாக வசிக்கும் இடங்களில் வணிக வளாகம் கட்ட வேண்டும் எனவும், ஆதிதிராவிடர் சமுதாய கூடங்கள் சமுதாய நலக்கூடங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும், ஆதிதிராவிடர் காலனி வீடுகள் அதிகமாக சேதமடைந்து இருந்தால் கலைஞர் கனவு இல்லம் திட்டம் சார்பில் புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்றும் கலந்து ஆலோசிக்க பட்டது.