பழுதடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரமியம் ஊராட்சியில் பழுதடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை;
மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரமியம் ஊராட்சியில் உள்ள மல்லிபட்டி மற்றும் இல்லியம்பட்டி கிராம மக்கள் தங்கள் விவசாயம் மற்றும் வங்கிகள் சார்ந்த பணிகளுக்காக மூலனூர் நகருக்கு அதிகம் வந்துபோக வேண்டியுள்ளது. இந்நிலையில் கிராம மக்கள் பயன்படுத்தி வந்த தார்ச்சாலை கடந்த சில வருடங்களாக அப்பகுதியில் அமைக்கப்பட்ட காற்றாலை கட்டுமானப் பணிகளுக்காக கனரக வாகனங்கள் அதிகம் சென்றுவந்ததால் சாலை மிகவும் சேதமடைந்து விட்டதாகவும், போக்குவரத்துக்கு பெரிதும் சிரமமாக இருப்பதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஊராட்சி நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.