பயங்கர ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள்
நத்தம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.20 கோடி இருப்பதாக தகவல் - பயங்கர ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் - மடக்கிப் பிடித்த பொதுமக்கள், தப்ப விட்ட போலீசார்;
திண்டுக்கல் மாவட்டம் நத்தம், சமுத்திரப்பட்டி சேர்ந்த அழகப்பன்(49) இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நத்தம் சிறுகுடி செல்லும் சாலையில் இவரது வீட்டில் இவரது தாய் சொர்ணம்(70) தனியாக வசித்து வரும் நிலையில். வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தின் வழியாக முகமூடி அணிந்த கொள்ளையர்கள் 6 பேர் பயங்கர ஆயுதங்களுடன் மறைந்திருந்தனர். வீட்டிற்குள் வந்த அழகப்பனை மடக்கி பிடித்த 6 கொள்ளையர்களும் எங்கெங்கு பணம் வைத்திருக்கிறாய் என்று அடித்து மிரட்டி ரூ.20 கோடி பணம் இருப்பதாக எங்களுக்கு தெரியும் பணத்தை கொடுத்து விடு என்று கத்தியால் குத்தி துன்புறுத்தி உள்ளனர். மாடியில் உள்ள தாய் சொர்ணத்தையும் இழுத்து வந்து மிரட்டி சித்தரவதை செய்த நிலையில் அழகப்பனின் தாய் கூச்சலிடமே அக்கம் பக்கத்தினர் கூடியுள்ளனர் இதைப் பார்த்த கொள்ளையர்கள் தப்பி ஓடிய போது பொதுமக்கள் மதுரை மேலூர் கொட்டகுடியை சேர்ந்த பிரபாகரன் என்பவரை விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அஜாக்கிரையாக இருந்ததால் அவர்கள் பிடியிலிருந்து கொள்ளையன் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.