கொலை மிரட்டல் விடுத்து பணம் பறித்த வாலிபர் கைது

திண்டுக்கல் அருகே உடைந்த பீர்பாட்டிலை காட்டி கொலை மிரட்டல் விடுத்து பணம் பறித்த வாலிபர் கைது;

Update: 2025-06-18 07:55 GMT
திண்டுக்கல்லை சேர்ந்த பிரபு இவர் திண்டுக்கல் வத்தலகுண்டு பைபாஸ் கருப்பண்ணசாமி கோவில் அருகே நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த திண்டுக்கல் குள்ளனம்பட்டி அண்ணாகாலனி பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் கிரி(24) என்பவர் உடைந்த பீர் பாட்டிலைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி பிரபு சட்டை பையில் வைத்திருந்த பணத்தை பறித்து சென்றதாக பிரபு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக கிரியை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News