காங்கேயம் வேன் ஓட்டுநர் கொல்கத்தாவில் குத்திக் கொலை பரபரப்பு
ஈச்சர் வாகனம் ஓட்டிச் சென்ற இளைஞரை கொல்கத்தாவில் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி.;
திருப்பூர் மாவட்டம் படியூர் ரோஸ்கார்டன் பகுதியை சேர்ந்த ராகுல் 25. இவர் கொல்கத்தாவிற்கு லோடு ஏற்றி ஈச்சர் வேனில் சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற தகராறில் இருதரப்பினருடைய கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து கொல்கத்தாவை சேர்ந்த நபர் ஒருவர் கத்தியால் கழுத்தில் இரண்டு முறை குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராகுல் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ராகுலுக்கு திருமணம் ஆகி வர்ஷா என்ற மனைவியும் இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளதாகவும் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்வதாகவும் ராகுலின் தந்தை நெஞ்சு வலி காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டு உடல் நிலை பாதித்து நிலையில் வீட்டில் உள்ளதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகின்றது. தற்போது ராகுலின் தாய் செல்வி மற்றும் உடன் பிறந்த சகோதரருடன் கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்