அரகண்டநல்லூரில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளியவருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிய முன்னாள் அமைச்சர்

மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்;

Update: 2025-06-18 16:17 GMT
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட அரகண்டநல்லூர் பேரூராட்சியில் இன்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளியவருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி 75 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி மாற்றுத்திறனாளி என்ற பெயரைக் கொண்டு வந்ததே கலைஞர் தான், அதற்கு முன்பெல்லாம் அவர்களை என்னென்னவோ பேர் கொண்டு கூறினார்கள், அதை மாற்றி மாற்று திறனாளிகள் என்று கூறவேண்டும் என கூறியது தலைவர் கலைஞர் என்று பேசினார். அதன் பின்னர் தற்போது முதலமைச்சராக உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத் திறனாளிகள் நியமிக்கப்படுவார்கள், நியமன பொறுப்புகளில் அவர்கள் அமர்த்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். தற்போது அரகண்டநல்லூர் பேரூராட்சியில் 12 பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள் அடுத்த முறை இது அரகண்டநல்லூர் பேரூராட்சியில் ஒரு நியமன உறுப்பினர் மாற்றுத்திறனாளி இருப்பார் என தெரிவித்தார். பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களது இருக்கைகள் உள்ள இடங்களுக்கே சென்று முன்னாள் அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் வீட்டுமனைப் பட்டாகளை வழங்கினர்.

Similar News