விக்கிரவாண்டி அருகே பள்ளி மாணவன் மாயம் போலீசார் விசாரணை
வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவன் மாயம்;
விக்கிரவாண்டி வட்டம், கப்பியாம்புலியூா், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராமதாஸ்- நந்தினி தம்பதியின் மகன் விஷ்ணு (14). இவா், விக்கிரவாண்டி பகுதியில் உள்ள தனியாா் மெட்ரிக். பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.இந்நிலையில் பள்ளிக்குச் செல்வதற்கு விருப்பமில்லை எனக் கூறிய விஷ்ணுவை அவரின் தாயாா் நந்தினி கண்டித்துள்ளாா். இந்நிலையில், விஷ்ணு திங்கள்கிழமை வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் மாயமானாா்.இது குறித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து மாணவா் விஷ்ணுவைத் தேடி வருகின்றனா்.