மயிலத்தில் பெண்கள் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

ஒன்றிய பெருந்தலைவர் தலைமையில் நடைபெற்றது;

Update: 2025-06-18 16:31 GMT
மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், மகளிர் உரிமை மற்றும் சமூக நலத்துறை சார்பில் விதவைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. முகாமிற்கு மயிலம் ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், மணிமாறன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய குழு உறுப்பினர் கண்ணன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மயிலம் ஒன்றியத்தில் உள்ள ஆதரவற்ற பெண்கள் ஏராளமானவர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டைகள் பதிவு செய்யப்பட்டது.தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன், ஒன்றிய கவுன்சிலர்கள் பரிதா சம்சுதீன், அஞ்சலாட்சி, உமா, ஊராட்சி தலைவர்கள் சந்திரசேகர், மகாலட்சுமி, மாவட்ட பிரதிநிதி சேகர் விவசாய அணி பாஸ்கர், கட்சி நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, ஞானசேகர், பிரபு கலந்து கொண்டனர்.

Similar News